Tue. Apr 30th, 2024

கர்ப்பணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மாரை வேலைக்கு  அழைப்பதை மே மாதம் இறுதிவரை தவிர்க்க கோரிக்கை

யாழ் மாவட்டத்தின் அரச துறையில் பணிபுரியும் கர்ப்பணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மாரை வேலைக்கு  அழைப்பதை மே மாதம் இறுதிவரை இயன்றளவு தவிர்க்க வேண்டும்  என உள்நாட்டலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன் அத்தியவசிய சேவைகளுக்காக அவர்களை பணிக்கு அழைப்பதாக இருப்பின் அருகிலுள்ள பணித் தளத்தில் அவர்களை பணிபுரிய அனுமதிக்க வேண்டுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் வழிகாட்டலில்  வௌியாகியுள்ள  சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்ஜன் ராமநாதன் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் முன்வைத்த  வேண்டு கோளுக்கிணங்க இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது,

தமக்கு அருகிலுள்ள அலுவலகங்களில் பணிபுரிய விரும்பும் கர்ப்பிணித் தாய்மார் அது தொடர்பில் தமது திணைக்களத்தின் பிரதானிகளுக்கு எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கோரப்பட்டுள்ளது,

அவர்கள் தமக்கு அருகிலுள்ள அலுவலகத்தில் பணிபுரிந்தாலும் அதற்கான ஊதியம் அவர்களின் நிரந்தர அலுவலகத்தினாலேயே செலுத்தப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு  தெரிவித்துள்ளது.,

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்