Mon. Apr 29th, 2024

கரவெட்டி ராஜகிராமத்தில் டெங்கு அபாயம்

கரவெட்டி ராஜ கிராமத்தில்  தற்போது பெய்து வரும் மழையினால் 35 குடும்பங்களுக்கு  மேல் பாவிக்கும்  குளிப்பதற்கான கிணற்றின் குளித்த நீர் தேங்கி சுகாதார பிரச்சினையை உருவாகியுள்ளது. வெளிப்புறத்தில் உள்ள கழிவு நீர் சென்று வடிவதற்காக  வைக்கப்பட்ட குழி நிரம்பி வழிவதனால்  கழிவுநீர் வழிந்து அப்பகுதியில் சேரும் சுதியுமாக  காணப்படுகின்றது. அந்த பகுதியில் உள்ள மக்கள் இதனால் டெங்கு போன்ற சுகாதாரன பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளார்கள். இது தொடர்பாக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையிடம் மழைக்காலத்துக்கு முதல் எடுத்து கூறியும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை எவ்விதமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ராஜா கிராம மக்கள் நியூஸ் தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது பிரதேச செயலகத்துக்கு அல்லது பிரதேச சபைக்கு உடனடியாக தெரிவித்து கழிவுநீர் வழிந்து  ஓடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்