Fri. Mar 29th, 2024

73 வருட சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித் 

 

126 டெஸ்ட் போட்டிகளில் ஏழாயிரம் ஓட்டங்களை கடந்து புதியதொரு சாதனையை பதிவு செய்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் அவுஸ்ரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் 23 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது ஏழாயிரம் ஓட்டங்களை கடந்து புதியதொரு சாதனையை பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வாலி ஹேமண்ட் 131 போட்டிகளிலும்,  அவுஸ்ரேலியா கிரிக்கெட் வீரர் டான் பிறாட்மேனன் , இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான வீரேந்திர  சேவாக் 134, சச்சின் டெண்டுல்கர் 136 போட்டிகளிலும்,  விராக்கோலி மற்றும் இலங்கை அணி வீரர் குமார் சங்ககாரா 138 போட்டிகளிலும்,  சுனில் கவாஸ்கர் மற்றும் மேற்கிந்திய அணி வீரர் விவியன் ரிசாட்ர்ட்ஸ் ஆகியோர் 140 போட்டிகளிலும் இச்சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் குறைந்த டெஸ்ட் போட்டியில் ஏழாயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்