Thu. May 2nd, 2024

கபடி உள்ளக விளையாட்டு மைதானம் தேவை

இலங்கையின் கபடிச் சங்கம் தமக்கென உள்ளக விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது. விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ச அவர்களிடம் கபடிக்கான உள்ளக விளையாட்டு மைதானத்தை அமைத்துத் தருமாறு கடிதம் மூலம்  கோரியுள்ளது.

இக் கடிதத்தில், கபடி வீரர்களுக்கு ஒரு உள்ளக விளையாட்டு மைதானம்  இல்லாதது ஒரு பெரிய குறைபாடு  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . அதன்படி, நிறைவடையும் தருவாயில் உள்ள கம்பாஹா வதுபிட்டிவாலா விளையாட்டு வளாகத்தை அதன் இலங்கை சங்கத்திடம்  ஒப்படைக்குமாறு கடிதம் கோரியுள்ளது. விளையாட்டு வளாகம் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்