Mon. May 6th, 2024

ஓய்வூதியத்தை இழக்க போகும் 60 எம்.பிக்கள்!!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பாராளுமன்றத்தை கலைத்தால் சுமார் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய உரிமைகளை இழக்க நேரிடும் நிலை ஏற்படவுள்ளது.

ஓய்வூதிய உரிமையை பெற பாராளுமனற உறுப்பினர் ஒருவர், பாராளுமன்றத்தில் 5 ஆண்டுகள் காலைத்தை நிறைவு செய்ய வேண்டும்.

எனவே மார்ச் 2 ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால் சுமார் 80 எம்.பி.க்கள் வரை ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த 60 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை மீட்டெடுக்க அரசாங்கம் எந்தவிதமான நடைமுறைகளையும் பின்பற்றாது.

அதே பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த முறை தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் அவர்கள் நிச்சயம் ஓய்வூதியத்தை இழப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்