Mon. May 6th, 2024

ஊவா மாகாண சபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவு

நள்ளிரவு 12.00 மணியுடன் ஊவா மாகாணத்தின் 6 ஆவது மாகாண சபையின் உத்தியோகபூர்வ கால எல்லை நிறைவடைந்துள்ளது.

இந்த மாகாண சபையை கடந்த 5 வருட காலப்பகுதியில் இந்த மாகாணசபையில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த மாகாண சபை தேர்தல் பெறுபேறிற்கு அமைவாக 34 உறுப்பினர்களுடன் 2 போணஸ் அங்கத்தவர்களைக் கொண்டதாக இது அமைந்திருந்தது.

இதில் 19 உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு உட்பட்டவர்களாவர். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 13 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் 2 உறுப்பினர்களும் இந்த மாகாண சபையில் இடம்பெற்றிருந்தனர்.

சஸீந்திர ராஜபக்ஷ, ஹரின் பெர்னான்டோ ஆகிய முதலமைச்சர்களுக்கு பின்னர் 6 ஆவது ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க பதவி வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்