Tue. Apr 30th, 2024

உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் யாழ் மாவட்ட அதிகாரிகள் வடமராட்சி மக்கள் விசனம்

உண்மைக்குப் புறம்பான செய்திகளை மாவட்ட அதிகாரிகள் வெளியிடுவதாக வடமராட்சி  மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யாழ் மாவட்டத்தில் நேற்று 300ற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளனதாக பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் கரவெட்டி பிரதேசத்தில் 48 பேர் தொற்று எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நேற்று கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் எந்தவிதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது எமக்கு தெரியவந்துள்ளது. இதேபோல் வேறு சுகாதார பிரிவிலும் இவ்வாறு நடைபெற்றிருக்க முடியும்.  இது தொடர்பாக ஆராயாமல் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் பொய்யான அறிக்கைகளை வெளியிடுகின்றனர். இது தொடர்பாக தெரிந்தும் சுகாதார துறையினர் மெளனம் சாதித்து வருகின்றனர்.  பொய்யான தகவல்களை மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளாலேயே வழங்கப்பிஅடு வருவதாக தெரியவந்துள்ளது. நாட்டில் மக்கள் முடக்க நிலை காரணமாக இணையதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் செய்திகளை வாசித்து அச்சத்தில் உள்ளனர். ஊர்ஜிதப்படுத்தப்படாத, உண்மைக்குப் புறம்பான செய்திகளை கொவிட் காலத்தில் வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் இன அரசு அறிவிக்கப்பட்ட போதிலும், அதிகாரிகளால் இவ்வாறான செய்திகளை வெளியிடுவது எந்த வகையில் நியாயம்.  மக்களை ஏன் இவ்வாறு பயமுறுத்துகிறார்கள் இதனால் அவர்களுக்கு என்ன இலாபம், பலருக்கு தொற்று என அறிவித்து அரசிடமிருந்து நிவாரணப் பொருட்களை வாங்குவதற்கா? அல்லது பணம் பறிக்கும் செயற்பாடா என மக்கள் குழம்பியுள்ளனர். ஏற்கெனவே யாழ் மாவட்டத்தில் இறக்கும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதில் மக்கள் திருப்தியற்ற நிலையில் இருக்கும் போது, இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு அதனை ஊர்ஜிதம் செய்வதாகவும் அவர்கள் குறை கூறுகின்றனர். இது தொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மெளனம் சாதிப்பது ஏன் எனவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்