Fri. Apr 19th, 2024

நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா பிற்போடப்பட்டுள்ளது.

யா/நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் ஜி.கிருஷ்ணகுமார்  அறிவித்துள்ளார்.

நெல்லியடி மத்திய கல்லூரியானது 2021ம் ஆண்டு தனது  நூற்றாண்டு விழாவை கண்டுள்ளது. இருப்பினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக இவ் நூற்றாண்டு விழா பிற்போடப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் கிருஷ்ணகுமார் அறிவித்துள்ளார்.
வடமராட்சி பகுதியில் முன்னணி பாடசாலைகளில் நெல்லியடி மத்திய கல்லூரியும் ஒன்றாகும். ஆரம்பத்தில் இப்பாடசாலை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் எனும் பெயர் கொண்டது.
ஆரம்பத்தில் தற்போது வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியாக இயங்கும் (செல்லையா பாடசாலை) இணைந்து செயற்பட்டது. அதன் பின்னர் இனக் கலவரத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் கட்டடங்கள் பல உடைக்கப்பட்டதனால் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் இணைந்து காலை 8 மணி முதல் 12 மணி வரைக்கும் பெண்களுக்கும் 12 மணி முதல் 4 மணி வரை ஆண்களுக்கும் என வகுப்புக்கள் நடைபெற்றது.  அதன் பின்னர் கல்லூரி அதிபர்கள் மற்றும் பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கைகோர்த்து கல்லூரிக்கான வளங்களை திரட்டி நிமிரச் செய்துள்ளனர். கல்லூரியின் வளர்ச்சியில் அயராது உழைத்து கல்லூரியை தேசிய பாடசாலையாக வளர்த்த அதிபர்களை இங்கே காட்சிப்படுத்துகின்றோம். கல்லூரியின் தற்போதைய முதல்வராக கிருஷ்ணகுமார் அவர்கள் 19 வது அதிபராக கடமையாற்றி வருகின்றார். கல்லூரியானது கல்வி,  விளையாட்டு,  தலைமைத்துவம் என மேலோங்கி நிற்கிறது. இது தொடர்பான ஆய்வை மீண்டும் ஒரு பார்வையில் காணலாம்…….
.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்