Thu. May 2nd, 2024

உடுப்பிட்டி நவஜீவன்ஸ் இறுதியாட்டத்திற்கு தகுதி

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் அனுசரணையுடன் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் நடாத்திவரும் உதைபந்தாட்ட சுற்று போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.
இதன் அரையிறுதியாட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த கழக மைதானத்தில் நடைபெற்று. இதில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியை எதிர்த்து சிவானந்தாஅணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி 6:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்