Sun. May 5th, 2024

உடுப்பிட்டி அ.மி.கல்லூரி கரப்பந்தாட்டத்தில் சாதனை 

வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி ஆண்களிற்கான மூன்று பிரிவுகளிலும் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். .
இதன் இறுதியாட்டம் நேற்று கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
16 வயது
16 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணியை எதிர்த்து தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி மோதியது.  இதில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி 25:21, 25:20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.
18 வயது
18 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணியை எதிர்த்து தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி மோதியது. இதில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி 25:22, 27:25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.
20 வயது
20 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணியை எதிர்த்து கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி அணி மோதியது.  இதில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி 25:20, 25:10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்