Mon. Apr 29th, 2024

இன்றுமுதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களின் நகல்கள் இன்று (ஆக .2) முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என்று பதிவாளர் செயலகம் தெரிவித்துள்ளது.

சான்றிதழ்களை மொபைல் போன்கள் மற்றும் கணினிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் விசா அல்லது மாஸ்டர்கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்படுள்ளது .

விண்ணப்பத்தின் நகல்களை அருகில் உள்ள பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களை www.rgd.gov.lk என்ற இணையத்தளத்திலோ அல்லது 011 288 95 18 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்