Fri. Mar 29th, 2024

வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளராக கே.சத்தியபாலன் அவர்கள் கடமையை பொறுபேற்றார்.

வடமராட்சி கல்வி வலயத்தின் 8 வது வலயக் கல்விப் பணிப்பாளராக கே.சத்தியபாலன் அவர்கள் தனது கடமையை உத்தியோக பூர்வமாக இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.

வடமராட்சி கல்வி வலய பணியாளர் நலன்புரிச் சங்க தலைவர் மா.நவநீதமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
வரவேற்புரைகளை கரவெட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே.கே.யோகநாதன்,
கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்வி பணிப்பாளர் மோ.தெய்வேந்திரா, தமிழ் பாட உதவிக் கல்வி பணிப்பாளர் க.பத்மகாந்தன் ஆகியோர் வாழ்த்துரைகளை
வழங்கியதுடன் வடமாகாண உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக வடமராட்சி கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கி.பாக்கியநாதன் அவர்களினாலும், வடமராட்சி வலய பாடசாலை அதிபர்களாலும் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்