Thu. May 2nd, 2024

ஆடிப் பிறப்பு வவுனியாவில்

ஆடிப் பிறப்பு நிகழ்வு பல தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று காலை (17.07.2021) வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தர புலவரின் சிலைக்கு முன்பாக ஆடிப் பிறப்பு விழா கொண்டாடப்பட்டது. வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கமும், நகர சபையும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

அதாவது தட்சணாயண காலத்தின் தொடக்க தினம் (இன்று) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் வளர்கின்றது. இக் காலத்திலேயே விதை விதைத்தல், மரங்கள் நடுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.

பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ், சர்க்கரையின் (வெல்லம்) தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள்.

முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றார்கள் – இந்து சமயத்தில் இந்த நாள் தேவர்களுடன் தொடர்புபடுத்தி வழிபடப்படுகின்றது.

அதாவது தட்சணாயண காலத்தின் தொடக்க தினம் (இன்று) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் வளர்கின்றது. இக் காலத்திலேயே விதை விதைத்தல், மரங்கள் நடுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்