Sun. Apr 28th, 2024

அமெரிக்காவுக்கு வரும் அனைத்து குடியேற்றங்களையும் நிறுத்த டொனால்ட் டிரம்ப் முடிவு

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவிற்கான அனைத்து குடியேற்றங்களையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் நேற்று நள்ளிரவு வெளியிட்ட செய்தியில், அவர் “கண்ணுக்கு தெரியாத எதிரியிடமிருந்து தாக்குதல் “, அவர் வைரஸை அழைப்பது போலவும், அமெரிக்கர்களின் “வேலைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம்” என்றும் குறிப்பிட்டார்.

அவர் இதுதொடர்பாக வேறு எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. ட்ரம்ப் நிர்வாகம் குடியேற்றத்தைத் தடுக்க தொற்றுநோயைப் பயன்படுத்துகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கோவிட் -19 தோற்று காரணமாக இதுவரை அமெரிக்காவில் 41,816 இறப்புக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 782,159 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

தொற்றுநோயின் மோசமான நிலை முடிந்துவிட்டது என்றும் நாடு மீண்டும் திறக்கத் தொடங்கலாம் என்றும் வெள்ளை மாளிகை வாதிட்டுவருகையில் ஜனாதிபதி டிரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்