Tue. Apr 30th, 2024

அனுமதியின்றி பாடசாலைகள் ஆரம்பம் தனியார் கல்வி உரியாளர்கள் காட்டம்.

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பாக எந்த விதமான அறிவித்தல்கள் வழங்கப்படாமல்
யாழ் மாவட்டத்தில் அனுமதியின்றி பல  பாடசாலைகள் இயங்கி வருகின்றது. யாழ் மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களிலும் முதற் கட்டமாக தரம் 5, தரம் 11, தரம் 13 மாணவர்களுக்கான வகுப்புக்களே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.  இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் பல மாணவர்கள் தமது சீருடையுடனேயே பாடசாலை சென்று வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
கல்வி அமைச்சினால் பாடசாலைகள் அடுத்த மாதம் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்ற போதிலும் தற்போது உள்ள நிலைமையை கருத்தில் கொள்ளாது அதிபர்கள் தான்தோன்றித்தனமாக பாடசாலைகளை ஆரம்பித்துள்ளனர் என தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
தனியார் கல்வி நிலையங்கள் தவறுதலாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து குறைந்தளவிலான மாணவர்கள் எண்ணிகையுடன் வகுப்புக்கள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் தற்போது யாழ் மாவட்டத்தில் உள்ள பவ பாடசாலைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதுவுமே கடைம்பிடிக்காமல் ஒரு வகுப்பில் 30 மாணவர்களுக்கு மேல் வரவழைத்து சமூக இடைவெளிகளைப் பேணாது பாடசாலைகள் நடைபெறுவது எந்தவகையில் நியாயம். இது தொடர்பாக சுகாதார பரிசோதகர்கள் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது ஏன்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் அக்கறை கொள்ளாது விட்டால் தாமும் வகுப்புக்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது யாழ் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிகை அதிகரித்து வருவதோடு ஏற்கனவே சில பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன. அத்துடன் நேற்று வடமராட்சி பகுதியில் 48 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் சில பகுதிகள் முடக்கும் நிலையும் உருவாகியுள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.  பாடசாலைகள் நடைபெறுவது தொடர்பாக சில கல்வி வலய அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன், நீங்கள் நடத்துங்கள்,  கல்வி வலயங்களிற்கு தெரியாமல் நடாத்துவதாகவும், பொதுச் சுகாதார பரிசோதகர் வந்தால் அதிபர்களே சமாளித்து விடுமாறும் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் சில மாணவர்கள் பேரூந்துகளில் பிரயாணம் சென்றே பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலையில் மாணவர்களை பாடசாலைகளுக்கு வருகைதருமாறு வற்புறுத்தியுள்ளதுடன், வருகை தராத மாணவர்களுக்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.  ஆசிரியர்கள் மாணவர்கள் நலன்களைப் பற்றி அறிக்கைகளை வெளியிடும் ஆசிரியர் சங்கங்கள் மெளனம் சாதிப்பது ஏன்?
சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் அனுமதியின்றி திருமண நிகழ்வு நடாத்தியமையால் பலர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு அவர்கள் மீது தனித் தனி வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது.
தற்போது ஒரு பாடசாலை மாணவருக்கு தொற்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டால் ஆசிரியர்களும், மாணவர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்களா? இது தொடர்பாக அதிபர்கள் மீது வழக்கு தொடரப்படுமா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட அரசாங்க அதிபர்,  வடமாகாண பொலீஸ் மா அதிபர் ஆகியோர் கவனமெடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்