சந்நிதியான் ஆச்சிரமத்தால் மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு மருந்து வகைகள் நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

வைத்தியசாலையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக 5இலட்சத்து 798 ரூபா பெறுமதியான மருந்து வகைகள்

வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி அவர்களிடம் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகி கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார். இவ் உதவித் திட்டத்தில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.