Thu. Apr 25th, 2024

கரவெட்டி மகேசன் வி.கழகத்தின் விழிப்புணர்வு துவிச்சக்கர பேரணி

மன இறுக்கம் மற்றும் தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பு பெற “துவிச்சக்கர விழிப்புணர்வு பேரணி” ஒன்றை கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்தின் 30வது ஆண்டு நிறைவையொட்டி ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில்
மன இறுக்கத்துலிருந்து விடுபட மைதானம் நோக்கி விரைவோம்,
நீரிழிவிலிருந்து விடுபட துவிச்சக்கர வண்டியை அதிகளவில் பயன்படுத்துவோம் எனும் நிலைகளை வலியுறுத்தி இடம்பெறும்  துவிச்சக்கரவண்டி மூலமான மாபெரும் விழிப்புணர்வு பேரணி எதிர்வரும்18.03.2023 அன்று சனிக்கிழமை காலை 07.30மணி முதல் ஆரம்பமாகவுள்ளது.
இப்பேரணி தொடர்பாக மகேசன் விளையாட்டுக் கழக உறுப்பினர் தம்பன் துசாந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
அண்மைக்காலத்தில் பல இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் தொலைபேசி மூலமான விளையாட்டுக்கள் மூலம் பல தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் எங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதை அறிய முடிகிறது. அது மட்டுமின்றி இள வயதில் மாரடைப்பு நீரிழிவு போன்ற நோய்கள் மூலமும் பல உயிரிழப்புகள் அல்லது தாக்கங்கள் இடம்பெறுவதனை அறியமுடிகிறது.
இதன் பின்னணியில் தான் இந்த துவிச்சக்கர வண்டி விழிப்புணர்வு பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ் துவிச்சக்கர பேரணி மகேசன் விளையாட்டுக் கழக மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி,  சாமியர் அரசடி சந்தி, கோயிற்சந்தை , கலிகைச் சந்தி, மந்திகை சந்தி, நெல்லியடிச் சந்தி, விக்கினேஸ்வர கல்லூரி வீதி ஊடாக மகேசன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நிறைவடையவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்