Sun. Jun 4th, 2023

இலவச கண்புரை சத்திரசிகிச்சை”

யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை (ஊயவயசயஉவ) சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் நன்கொடையாளர்களின் உதவியுடன் இலவசமாக கண்புரை சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நோயாளர்களைத் தெரிவுசெய்யும் கண்பரிசோதனை முகாம் எதிர்வரும் 27.05.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், தொல்புரம் ஆரம்ப சுகாதார மருத்துவப் பிரிவிலும் நடைபெறவுள்ளது.
எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளர்கள் மேற்படி கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்