Sun. May 5th, 2024

வலைபந்தில் சாதித்தது கொட்சொட் அணி

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கம் நடாத்திய வலைப்பந்தாட்டத் தொடரில் தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொட்சொட் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரியாலை மத்தி சனசமூக நிலைய காசிப்பிள்ளை மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுயாட்டத்தில் கொட்சொட் அணியை எதிர்த்து யூனியன்ஸ் அணி மோதியது.
யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவம் செய்யும் வீராங்கனைகள் களம் இறங்கிய கொட்சொட் அணியை எதிர்த்து இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணி வீராங்கனை எழில் உட்பட களம் இறங்கிய யூனியன்ஸ்  அணி மோதியது. இதனால் ஆட்டம் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
நான்கு கால்ப் பகுதி ஆட்டங்களாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது  கால் பகுதி ஆட்டங்களில் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய
கொட் சொட்ஸ் அணி 16:13, 12:09 முன்னிலை வகித்தனர். மூன்றாவது கால்ப் பகுதி ஆட்டத்தில் வீறு கொண்ட யூனியன்ஸ் அணி 15:12 என புள்ளிகளை பெற்றனர்.  நான்காவது கால்ப் பகுதி ஆட்டத்தில் கொட்சொட் அணியினரின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் யூனியன்ஸ் அணியினர் திணறினர்.  இதனால் ஆட்ட நேர முடிவில் கொட்சொட் அணி 52: 44 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். வலைப்பந்தாட்ட ராணி மற்றும் தடுப்பாட்ட வீராங்கனையாக கொட்சொட் அணி வீராங்கனை அமுதினி, சிறந்த பேற்றுக்கெய்வோனாக கொட்சொட் அணி வீராங்கனை தனுஜா, சிறந்த மத்திய கள வீராங்கனையாக விதுசனா  ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
பெரியபுலம் மகா வித்தியாலய ஆசிரியரியை திருமதி உதயா குணநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தரும், முன்னாள் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்க தலைவருமான திருமதி ஜே.எவ்.ரூபசிங்கம், சிறப்பு விருந்தினராக மகாஜனக் கல்லூரி ஆசிரியை திருமதி ஜெயந்தி ஜெயகரன் அவர்கள் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்