Sat. May 4th, 2024

DSI கிண்ணம் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி வசம்

DSI கிண்ணத்திற்கான

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களிற்கான வொலிபோல் தொடரில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி 17, 19 ஆகிய இரு பிரிவுகளில் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

DSI கிண்ணத்திற்கான யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களிற்கான வொலிபோல் தொடர் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
17 வயதுப் பிரிவினருக்கான இறுயாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து பருத்தித்துறை சென்தோமஸ் அணி மோதியது. இதில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி 25:18, 25:16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
19 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான இறுயாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய அணி மோதியது. இதில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி 25:20, 25:16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்