Wed. May 8th, 2024

750 தனியார் பேருந்து சேவை நாளை பகிஸ்கரிப்பில்

இலங்கை போக்குவரத்து பருத்தித்துறை சாலை முகாமையாளரின் தன்னிச்சையான  செயற்பாட்டால் நாளை யாழ்ப்பாணம் பருத்தித்துறை (750) போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து பருத்தித்துறை சாலை முகாமையாளரின் தனிச்சையான செயற்பாடு மற்றும் பொலீஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறு செயற்படுவதைக் கண்டித்தே இவ்வாறான பகிஸ்கரிப்பு போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து பருத்தித்துறை சாலைக்கு வழங்கப்படும் எரிபொருள் டீசலை பருத்தித்துறை சாலை மற்றும் பருத்தித்துறை தனியார் பேரூந்துகளுக்கு சமமாக பங்கிட்டு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆனால் அதனைக் கருத்தில் கொள்ளாது முகாமையாளரின் தனிச்சையான செயற்பாடு காரணமாக தாம் பாதிகாகப்படுவதாக பருத்தித்துறை தனியார் பல தடவைகள் பல தரப்பினருக்கும் சுட்டிக் காட்டப்பட்ட போதிலும் அவர் தனது தன்னிச்சையாக செயற்படுவதில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. தமக்கு எரிபொருளை உரிய நேரத்தில் வழங்காது வேண்டும்மென்றே காக்க வைப்பது, எரிபொருளை வழங்குவதில் பின்னடிப்பு என தன்னிச்சையான செயற்பாட்டில் ஈடுபடுவதாக சுட்டிக் காட்டியுள்ளனர். இது தொடர்பாக
நேற்று பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் பருத்தித்துறை தனியார் பேருந்து சங்கத்தினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து  இரு தரப்பினருக்குமான போச்சு வார்த்தை நடைபெற்றது.  இதில் 28 லீற்றர் டீசல் வழங்குவதற்கு முகாமையாளரினால் சம்மதம் தெரிவிக்கப்பட்டதையடுத்து தனியார் சங்கம் இணக்கப்பாட்டுடன் முடிவடைந்தனர்.
ஆனால் இன்று எரிபொருள் பெறச் சென்ற போது தனியார் பேருந்துகள் சில தனிப்பட்ட வகையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெறுவதாக சுட்டிக்காட்டி எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் குழப்பமடைந்த தனியார் பேருந்து சங்கத்தினர் போராட்டத்தை முன்னெடுக்க முயன்றனர். இதனையடுத்து குறைந்தளவிலான எரிபொருளை வழங்குவதாக கூறியுள்ளார்.  ஆனால் பொலீஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய டீசலை வழங்க வேண்டும் எனக் கூறி நாளை பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பலர் தமது கடமைகளுக்கு செல்ல பேரூந்துகளிலேயே பயணம் செய்கின்றனர்.  சாதாரணமாகவே இலங்கை போக்குவரத்து பேரூந்துகளில் பயணிகள் பலர் நெருக்கமாக சென்று வரும் நிலையில் தனியார் பேருந்துகள் பகிஸ்கரிப்பில் ஈடுபடுபதனால் பயணிகள் பலர் அசெளகரியத்திற்கு உள்ளாக நேரிடுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பருத்தித்துறை சாலை முகாமையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தனியார் பேருந்துகள் பல தமது போக்குவரத்து சாலை தவிர்ந்த இடத்தில் டீசலை பெறுவதாக தாம் டீசலை வழங்கவில்லை என குறிப்பிட்டார்.
இது தொடர்பாக வடமாகாண இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,
பருத்தித்துறை சாலை முகாமையாளரின் தனிச்சையான செயற்பாடு தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இது தொடர்பாக அவருக்கு பல தடவைகள் தம்மால் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் முடிவில் மாற்றம் இல்லை.  இது தொடர்பாக உயர்பீடத்திற்கு அறிவிக்கவுள்ளோம். அத்துடன் பருத்தித்துறை சாலைக்கு வழங்கப்பட எரிபொருளை பகிர்தளிக்கவே குறிக்கப்பட்டது. அவர்கள் வெளியில் டீசல் பெறுவதை தடை செய்ய வேண்டும்,  அவர்களுக்கு டீசலை வழங்க கூடாது என்ற அறிவித்தல் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், இது அவரின் தனிப்பட்ட தீர்மானம் எனவும்  அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்