Mon. May 20th, 2024

றேஞ்சஸ் அணிக்கு 3 வருடங்கள், பாடுமீன் அணிக்கு 6 மாதங்கள் தடை – பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் செயற்குழு அறிவிப்பு

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்திய  வைர விழா உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுயாட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தினைத் தொடர்ந்து கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம்  3 வருடங்கள் உதைபந்தாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டதுடன் 2 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  பாடுமீன் விளையாட்டுக் கழகத்திற்கு  6 மாத காலம் தடையும்  50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை லீக்கின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்  இறுதியாட்டத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வல்வை விளையாட்டுக் கழக அறிக்கை, நடுவர்கள் அறிக்கை, பார்வையாளர்கள் அறிக்கை மற்றும் நேரடி காணொளி என்பவை அவதானிக்கப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் செயற்குழு அறிவித்துள்ளது.
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்திய வைரவிழா கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுயாட்டம் கடந்த 18ம் திகதி தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.  இதன் இறுயாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து பாடுமீன் அணி மோதியது. இதில் பாடுமீன் அணி வெற்றிவாகை சூடினர். ஆட்டம் நிறைவடைந்த பின்னர் கலவரம் ஏற்பட்டது.
இது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் செயற்குழுக் கூட்டம் இன்று கூடினர்.
இதன்படி இக் கரவரத்திற்கு கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் பாரிய தவறிழைத்தமை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் உதைபந்தாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட 3 வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வல்வை விளையாட்டுக் கழகத்தின் பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கமைய ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதமும், பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினை அவமானப்படுத்தி, நிர்வாகச் செலவீனங்களுக்காக 50 ஆயிரம் ரூபா அபராதமும் என 2இலட்சம் ரூபா அபராதமும்,  பாடுமீன் விளையாட்டுக் கழகத்தின் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களின் ஒழுக்கமின்மையான நடவடிக்கை காரணமாக பாடுமீன் விளையாட்டுக் கழகம் 6 மாத காலம் உதைபந்தாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டதுடன் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கிற்கு 50 ஆயிரம் ரூபா அபராதமும் வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்