Mon. Apr 29th, 2024

கடைசியில் பழங்குடிகளையும் விட்டுவைக்கவில்லை.. அமேசான் காட்டிற்கும் சென்ற கொரோனா.. எப்படி வந்தது?

அமேசான் காடுகளில் உள்ள பழங்குடி இன மக்களுக்கும் கொரோனா வைரஸ் ஏற்பட தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க 155 நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி உள்ளது. பிரேசிலில் இதனால் 6,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 255 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தற்போது பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் பழங்குடி இன மக்களுக்கும் கொரோனா வைரஸ் ஏற்பட தொடங்கி உள்ளது. அமேசான் காடுகளில் மொத்தம் 300க்கும் அதிகமான பழங்குடி மக்கள் குழுக்கள் உள்ளது. இதில் பல லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் வெளியுலகுடன் தொடர்பில் இல்லை. வெகு சிலர் மட்டும் வெளியே சென்று பணிகளை செய்கிறார்கள். அப்படி பணி செய்யும் பெண் ஒருவருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது .

20 வயது நிரம்பிய கொக்காமா பழங்குடி குழுவை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வந்துள்ளது. அமேசான் காட்டில், பிரேசில் தலைநகரில் இருந்து சுமார் 850 கிமீ தூரத்தில் இவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இங்குள்ள பெண்ணுக்குத்தான் கொரோனா வந்துள்ளது. பிரேசில் மருத்துவர் ஒருவர் மூலம் இவருக்கு கொரோனா வந்துள்ளது. பிரேசில் மருத்துவர் ஒருவர் இந்த மாகாணத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

கடந்த வாரம் பிரேசில் சென்று மீண்டும் காட்டிற்கு திரும்பிய இவருக்கு கொரோனா வந்தது. அவரிடம் நர்ஸாக பணி புரியும் இந்த பழங்குடி பெண்ணுக்கும் கொரோனா பரவி உள்ளது. கொக்காமா என்பது அமேசானில் இருக்கும் பெரிய பழங்குடி குழுக்களில் ஒன்றாகும். இதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள். கொலம்பியா, பெரு ஆகிய நாடுகளில் எல்லை வரை இவர்கள் விரிந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனாலும் இவர்கள் இனம் அழிந்து வரும் இனம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பெண்ணின் குடும்பத்திற்கும் கொரோனா அறிகுறி உள்ளது. இதனால் அந்த இனத்தில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரவினால் அங்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். அங்கு மருத்துவ வசதிகள் மிக மிக குறைவு ஆகும்.

அமேசான் காடுகளில் இருக்கும் பழங்குடி மக்களை அங்கிருந்து அனுப்ப, பிரேசில் அரசு தீவிரமாக முயன்று வருகிறது. அங்கிருக்கும் காடுகளை பயன்படுத்த அந்நாட்டு வலதுசாரி அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதனால் வரிசையாக அங்கு நிறைய திட்டங்களை அந்நாட்டு அரசு அறிவித்தது. தற்போது அந்த மக்களை மேலும் என் துன்புறுத்தும் விதமாக தற்போது கூடுதலாக அங்கு வைரஸ் தாக்குதல் வேறு வந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்