Mon. Apr 29th, 2024

ஹர்பஜனுடன் பிரண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் லாஸ்லியா. ஷேண்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் “பிரண்ட்ஷிப் “படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியா தற்போது ஹர்பஜன் சிங்குடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்.

 

 

ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு கிரிகெட் வீரர் முதன்முதலில் முழு நீல கதாநாயகனாக நடிப்பது இந்திய சினிமாவில் இதுவே முதன்முறை என படக்குளு இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டரிலே தெரிவித்து இருந்தது.

பிக்பாஸ் முடிந்து தற்போது அதில் பங்கேற்ற ஒவ்வொரு பிரபலத்திற்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் லாஸ்லியாவுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்திருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்