Thu. May 16th, 2024

சுதந்திர தினத்தையடுத்து மன்னாரில் 48 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும் சாமியார்

நாட்டின் 72 ஆவது சுதந்திர தினமான இன்று செவ்வாய்க்கிழமை (4) நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டி மன்னாரில் தவம் இருந்து உண்ணாவிரதத்தை  இன்று மதியம் 12 மணியளவில் ‘சாக்கு சாமியார்’ என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிறிஸ்ணன் டயஸ் என்கின்ற குருஜி ஆரம்பித்துள்ளார்.

நாட்டில் சமாதானம் ஏற்படவும் சாதி, மத, இன, மொழி பேதமின்றி மக்கள் ஒற்றுமையாக வாழவும், மன்னாரில் சாக்கு சாமியார் என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிறிஸ்ணன் டயஸ் என்கின்ற குருஜி இவ்வாறு 48 நாட்கள் தொடர்ச்சியாக தவம் இருந்து உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் பிரதான பாலம் வங்காலை சரணாலய சுற்று வட்டார காரியாலயத்திற்கு அருகாமையில் ஓலைக் குடிசை அமைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
-இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் உண்ணாவிரதம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
-ஆரம்ப நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார்,திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கண்ணண் குருக்கள்,மூர்வீதி ஜீம்மா பள்ளி மௌலவி எஸ்.அசீம், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்,மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.செல்வக்குமரன் டிலான் , பாடசாலை மாணவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ச்சியாக 48 நாட்கள் தவம் இருந்தும், உண்ணாவிரதம், மௌனவிரதம் இருந்தும் மேற்கொள்ளப்படும் இந்த விரதம் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி மதியம் 12 மணியுடன் முடிவடையும்.
குறித்த சாமியார், கடந்த வருடம் நாட்டின் சுதந்திர தினத்தன்று நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி மன்னார் தள்ளாடி அந்தோனியார் ஆலயத்தில் இருந்து அநுராதபுரம் சிறிமா போதி வரை அங்கப் பிரதட்சை மேற்கொண்டார். சுமார் 130 கிலோ மீற்றர் தூரம் இவ்வாறு உருண்டு யாத்திரை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்