Thu. May 2nd, 2024

விரைவில் ஸ்தம்பிக்க போகும் இலங்கை , இறக்குமதியை நிறுத்திய எரிவாயு நிறுவனம்

அனைத்துவிதமான எரிவாயு இறக்குமதியை தாங்கள் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கையில் எரிவாயு விற்பனையில் ஈடுபடும் laugfs நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்சமயம் உள்ள அந்நிய செலாவணி தட்டுப்பாட்டால் தங்களினால் இறக்குமதிக்கான நடைமுறையை வங்கிகளின் மூலம் மேற்கொள்ளமுடியாமல் உள்ளதினால் இந்த முடிவு எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இலங்கை வந்தடைந்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று எண்ணையை இலங்கையில் இறக்காமலே திரும்பி சென்றுள்ளதாக வதந்திகள் உலாவரும் நிலையில் அரசாங்கம் அதனை மறுத்திருந்தது.
இந்த நிலையில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்விக்கு இன்னமும் 25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இறக்குமதிக்கான தடைகள் பலவழிகளிலும் ஏற்படுத்தப்பட்டு அந்நிய செலாவணி நெருக்கடியில் இருந்து மீள அரசு முயன்று வருகின்றது.
ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கு கொடுப்பனவு கால எல்லைகள் அண்மித்து வரிவதனால் இலங்கை மிகுந்த திண்டாடத்தில் உள்ளது.
தேவையான ஏற்றுமதி வருமானம் இல்லாத நிலையில் வெளிநாடுகள் டாலர் களில் வழங்கும் கடன்களில் மட்டுமே அந்நியச்செலாவணியை அரசாங்கம் பெற்றுவரும் நிலையில், கடன்களுக்கான வட்டிகள் மற்றும் அதற்கான கொடுப்பனவு என்பன அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் விட்டுள்ளது.
நேற்றைய தினம் அரசாங்கத்தின் கடன் செலுத்தும் தன்மையை மதிப்பிடும் நிறுவனம் ஒன்று இலங்கையின் தர நிலைமையை மேலும் குறைத்ததன் மூலம் முதலீடுகள் மூலம் வரும் அந்நியச்செலாவணிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் எரிபொருள், எரிவாயும், மற்றும் இதர அத்தியாவசிய இறக்குமதி பொருட்களான சீனி மற்றும் கோதுமை மா என்பவற்றுக்குமான தடுப்பாடுகள் விரைவில் ஏற்படும் நிலை உருவாகும். இவ்வாறு தொடரும் நிலையில் நாடு இஸ்தம்பிதம் அடையும் நிலைக்கு விரைவில் தள்ளப்படும்.
ஏற்கனவே லெபனான் நாடு அந்நியச்செலாவணி பிரச்சினையால் ஏற்பட்டுள்ள சிக்கலினால் நாட்டில் மின்சாரத்துக்கு தேவையான எரிபொருளை கூட இறக்குமதி செய்யமுடியாமல் இருளில் மூழ்கி இருப்பதுடன் நாட்டுமக்கள் பஞ்சத்தில் மாட்டியுள்ளார்கள்.
அரசாங்கம் விரைந்து இந்த பிரச்சினக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்குமானால் விரைவில் நாடு பஞ்சத்தில் அகப்படும் அவலநிலை ஏற்படும்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்