Tue. Apr 30th, 2024

விக்டோரியா கல்லூரியின் பந்து வீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் திணறியது யாழ் இந்து பி அணி

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட்  சங்கம் நடாத்தும் 13 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான கிரிக்கெட் தொடரில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணி இனிங்ஸ் மற்றும் 91 ஓட்டங்களால் அபார வெற்றி ஈட்டியது.

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடாத்தும் 13 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான கிரிக்கெட் தொடரில் இன்று சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணியை எதிர்த்து யாழ் இந்துக் கல்லூரி பி அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்துக் கல்லூரி அணி சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணியின் கிரிதரன் மற்றும் ரகுராஜ் ஆகியோரின் பந்து வீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் திணறினர்.
இதனால் யாழ் இந்துக் கல்லூரி பி அணி 21.3 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 16 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். அவ்வணி சார்பில் அதிகபட்சமாக  ஜனுயன் 8 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் கிரிகரன் 4, ரகுராஜ் 3, வேணுஜன் 2, தரணியன் ஒரு இலக்குகளையும் கைப்பற்றினர்.
தனது முதலாவது இனிங்ஸில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணி 28.4 பந்துப் பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதலாவது இனிங்ஸை நிறுதித்தியது.
அவ்வணி சார்பில்
தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த யாழ் இந்துக் கல்லூரி பி அணி 33.1 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். அவ்வணி சார்பில் இந்துஜன் 31 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணி சார்பில் தரனிபன் 4, கிரிகரன் 3, டர்சிகன் 2, ரகுராஜ் ஒரு இலக்குகளையும் கைப்பற்றினர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்