Fri. May 3rd, 2024

வரலாற்றுச் சாதனையை பதிவு செய்த மன்னார் இலுப்பைக்கடவை தமி்ழ் வித்தியாலய அணி

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்ட தொடரில் மன்னார் இலுப்பக்கடவை தமிழ் வித்தியாலய அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தனர்.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் இன்று புதன்கிழமை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் மன்னார் இலுப்பக்கடவை தமிழ் வித்தியாலய அணியை எதிர்த்து மன்னார் சென்சேவியர் அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் ஆட்டம் ஆரம்பமாகி 2வது நிமிடத்தில் சென்சேவியர் அணிக்கு தண்டனை உதை கிடைத்தது. இதனை அவர்கள் சரியாக பயன்படுத்தி கோலாக்கினர். சற்றும் சளைக்காமல் மன்னார் இலுப்பக்கடவை தமிழ் வித்தியாலய அணி போராட அவர்களுக்கும் தண்டனை உதை கிடைக்க அதனையும் அவர்கள் சரியாக பயன்படுத்த முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தனர்.  இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாட்டில் ஈடுபட்டனர். இருப்பினும் மடு கல்வி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி களம் இறங்கிய மன்னார் இலுப்பக்கடவை தமிழ் வித்தியாலய அணி வீரர் டிதுசன் மிகச் சிறப்பான கோலைப் போட ஆட்ட நேர முடிவில் மன்னார் இலுப்பக்கடவை தமிழ் வித்தியாலய அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். மடு கல்வி வலய பாடசாலைகளில் மாகாண மட்ட கால்பந்தாட்ட போட்டியில் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி
மன்னார் இலுப்பக்கடவை தமிழ் வித்தியாலய அணி வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்