Sat. May 11th, 2024

நெல்லியடி மற்றும் கரணவாய் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கை

நெல்லியடி மற்றும் கரணவாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுகாதார முறைப்படி இயங்காத உணவகங்களுக்கு தண்டப் பணம் அறவிடப்பட்டதோடு சீர் செய்யப்பட்ட பின்னரே உணவகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறும் இன்று புதன்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதி மன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நெல்லியடி பொதுச் சுகாதார பிரிவில் ஒரு ரெஸ்ரோரன் மற்றும் இரு உணவகங்களுக்கும், கரணவாய் பொதுச் சுகாதார பிரிவில் ஒரு உணவகங்களுக்குமே குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை நெல்லியடி மற்றும் கரணவாய் பொதுச் சுகாதார பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் நெல்லியடி பொதுச் சுகாதார பிரிவில் 3 உணவகங்களில் உணவை கையாளுபவர்கள் ஏப்ரன் தொப்பி இல்லாமலும், ரெஸ்ரோரன் ஒன்றில் சுவர் அழுக்கான முறையில் காணப்பட்டமை,  கழிவு நீர் குழி வெடித்துக் காணப்பட்டமை, குளிர்சாதன பெட்டிக்குள் சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை சேர்த்து வைத்தமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்கும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஏப்பிரன் தொப்பி இல்லாமல் உணவு கையாண்டவர்களுக்கு தலா 6ஆயிரம் ரூபாவும்,  ரெஸ்ரோனுக்கு 12 ஆயிரம் ரூபாவும்,
கரணவாய் பகுதியில் திண்மக் கழிவை ஒழுங்கான முறையில் அகற்றாமை உட்பட 3 குற்றங்களுக்காக 12 ஆயிரம் ரூபா தண்டப் பணமாக செலுத்துமாறும் பருத்தித்துறை நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்