Sat. May 11th, 2024

பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு குடும்பச் சூழலே முக்கிய பங்கு – ப.தர்மகுமாரன்

குடும்பசூழல் ஆரோக்கிமாக இருந்தால் பிள்ளைகள் ஆளுமைமிக்கவர்களாக உருவெடுப்பார்கள் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார். பார்வதி அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் பெற்றோர் களுக்கான விழிப்பூட்டலும் கருத்தாடலும் வணபிதா ஜனகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பெற்றோரும் குடும்பமும்  என்னும் தலைப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தனது உரையில் குடும்பமே பிள்ளைகளின் முதல் வகுப்பறை. பெற்றோரே முதல் ஆசிரியர்கள். இங்கு எதை பற்றுகிறானோ அது பசுமரத்து ஆனிபோல் ஆழமாக பதிகின்றது. அதனால் தான் சொல்லுவார்கள் பிள்ளை கெட்டவார்த்தை பேசவில்லை கேட்டவார்த்தையை பேசுகின்றது. எனவே குடும்ப சூழல் அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, பண்பாடு, சிறந்த பழக்க வழக்க கொண்டதாக இருத்தல் வேண்டும். எமது முன்னோர்கள் சனி, ஞாயிறு நாட்களை சரியாக பயன்படுத்தினார்கள். பிள்ளைகளுக்கு எண்ணெய் தேய்த்து இயற்கைமுறையில் முழுகவைத்து, ஆரோக்கியமான உணவினை கொடுத்து அடுத்த நாளை ஒய்வாக வைத்திருக்க பழகி கொண்டார்கள். இதனால் குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் பெருகியிருந்தது. ஆனால் இன்று தலை தேய்க்க சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குச்  செல்கிறார்கள். இதன் மூலம் காசு இருந்தால் எதனையும் எங்கேயும் பெற்றுக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள். இது தவறானது.பெற்றோர்கள் அதிகளவு பணத்தை பிள்ளைகளுக்கு செலவு செய்வதைவிட அதிக நேரத்தை பிள்ளைகளுடன் செலவு செய்ய வேண்டும். கணவன் மனைவிக்கிடையில் கருத்துவேறுபாடுகள் வரலாம். அம்மா அப்பாக்கிடையில் பிள்ளைகள் முன்னிலையில் கருத்துவேறு பாடுகள் வரக்கூடாது குடும்பத்தில் பெற்றோர்கள் மரத்தின் வேர்போன்றவர்கள். பிள்ளைகள் அதில் பூத்துக்குலுங்கும் பூக்கள் போன்றவர்கள்  வேர்கள் அறுந்துவிட்டால் பூக்கள் உதிர்ந்துவிடும். எனவே குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமை இதன் மூலம் ஆளுமைமிக்க நற்பிரஜைகளை உருவாக்க முடியும் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்