Fri. May 10th, 2024

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக பிரான்பற்று மக்கள் வழக்கு தாக்கல் செய்ய முடிவு

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளா் இ. இளங்கோவன் அவா்களினால் காணிக் கட்டடம் முறைப்படி வழங்கப்படும் என உறுதி மொழி வழங்கப்பட்ட போதிலும் 6 மாதங்களைக் கடந்த நிலையிலும் இழுத்தடிப்பு நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த மக்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பிரான்பற்று கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும் வலி.தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரான்பற்று கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாடசாலை அதிபர்,  வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டே நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டவுள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் கிராம அபிவிருத்தி சங்கத்திற்குரிய காணி கட்டிடம் விடுவிக்கப்படும் என கடந்த 09.03.2021 ஆம் திகதிய கடிதம் மூலம் பிரான்பற்று  கிராம அபிவிருத்திச் சங்க தலைவருக்கு அறிவித்திருந்தும்  இதுவரை  காணியோ  அன்றி கட்டிடமோ முறைப்படி வழங்கப்படவில்லை.
இதனால் விசனமடைந்த  பிரான்பற்று கிராம அபிவிருத்திச் சங்க நிா்வாகிகளும், பிரான்பற்று மக்களும்  ஒன்றுகூடி நீதி மன்றத்தை நாடுவதற்கான  நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
 
பிரான்பற்று கிராம அபிவிருத்திச்  சங்கத்தின்  காணி கட்டிடம்  பிரான்பற்று கலைமகள் பாடசாலையின் தேவைக்காக  முன்னாள் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளா் நா.வேதநாயகன் அவர்களின்  கோாிக்கைக்கு அமைவாக  கட்டிடம் பாடசாலை அதிபருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.
பாடசாலை அதிபரினால் பிரான்பற்று  கலைமகள் பாடசாலையின் கல்வித்தேவை பூர்த்தியடைந்துள்ளது என்றும், விரைவில் பிரான்பற்று கலைமகள் பாடசாலையின் காணி கட்டிடம் கிராம அபிவிருத்தி சங்க தலைவாிடம் வழங்கப்படும்  என எழுத்து மூலம்  வழங்கிய கடிதம் வழங்கப்பட்டள்ளது.
 
இருந்தும்  இன்றுவரை  உள்ள நிலையில்  வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளா்  காணி கட்டிடம் வழங்கப்படும் என எழுத்து மூலம் கூறி  ஆறு மாதங்கள்  கடந்த  போதிலும்  இதுவரை எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்காது கிடப்பில் போட்டுள்ளது.
 
இந் நிகழ்ச்சித் திட்டத்திற்காக இதுவரை சகல மட்ட அதிகாாிகள் மட்டத்தில் 07 கூட்டங்கள் அறிக்கையிடப்பட்டு  வடக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட நிலை அதிகாாிகள் நோில் வந்த பாா்வையிட்டு  கட்டிடங்கள் ஒரு வாரத்தில்  வழங்கப்படும் என கூறியும் இது வரை கட்டிடம் வழங்கப்படாத சுழலில்  பிரான்பற்று கலைமகள் பாடாலை அதிபா், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளா் மற்றும் வடக்கு மாகாண அதிகாாிகள் அனைவருக்கம் எதிராக பெயா்குறித்து நீதி மன்றம் செல்லவுள்ளதாக பிரான்பற்று கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவா் – வலி.தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினா்  சி.மகேந்திரன் ஊடகங்களுக்கு தொிவித்துள்ளாா். 
 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்