Mon. Apr 29th, 2024

வடமாகாணத்திற்கு முதலாவது தேசிய மட்ட பதக்கம் – விக்டோரியா மாணவன் பதிவு – பயிற்றுவிப்பாளர் சுபாஸ் அவர்களுக்கு வைரலாகும் பாராட்டுக்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் சுழிபுரம் விக்டோரியா வடமாகாணம் சார்பில் முதலாவது வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி பெருமை சேர்த்துள்ளனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு தியகம மைதானத்தில் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இதில் 20 வயதிற்குட்பட்ட அண்களுக்கான  கோலூன்றி பாய்தலில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த உ.சுயாதன் 3.70m உயரம் பாய்ந்து வெண்கல பதக்கத்தையும் அ.திலக்சன் 3.60m உயரம்  பாய்ந்து வர்ணச் சான்றிதழுடன்  நான்காம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.
பயிற்றுவிப்பாளரும் ஆசிரியருமான  சுபாஸ் அவர்கள் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் கடமையாற்றிய போது பல மாணவர்களை தேசிய வீரர்களாக்கியதோடு மட்டும் நின்று விடாது தற்போது விக்டோரியா கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று தற்போது நடைபெற்று வரும் தேசிய மட்ட போட்டியிலும் கோலூன்றி பாய்தலில் தேசிய வீரர்களை உருவாக்கி வருகின்றார். இதன் மூலம் தேசிய வீரர்களை உருவாக்குவது வீரர்களில் மட்டுமல்ல பயிற்சியாளரிலும் தங்கியுள்ளது என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்து சுபாஸ் அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்