Tue. Apr 30th, 2024

வடமராட்சி கிழக்கில் கிளர்ந்தெழுந்த மீனவர் அமைப்புகள் , 13 மில்லியன் பண ஆசையால் பறிபோன கடல்வளம்

வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் கடலட்டை பிடியில் ஈடுபடும் மன்னார் மற்றும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக்கோரி இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை 11.30
மணியளவில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் க-சண்முகநாதன் தலைமையில் இடம்பெற்றது.
எமது வளத்தை சுரண்டி எமது வயிற்றில் அடிக்காதே , அத்துமீறிய கடலட்டை தொழில் அனுமதியை உடனடியாக இரத்து செய் , கடல் வளமே எமது சொத்து ,கடலட்டை தொழில் மூலம் எமது வளங்களை அழிக்காதே போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனிடையே குடாரப்புவில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று காட்டுவதற்காகவே கடலட்டை பிடிக்க இடம் வழங்கியுள்ளதாக தேவாலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்
இன்றயதினம் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள்முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதன் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே .சிவாஜிலிங்கம் , மேலும் பல அரசியல் வாதிகள் மீனவ சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பெரும் திரளானோர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பேணி போராட்டத்தில் ஈடுப்படிருந்தார்கள். போராட்டத்தின் இறுதியில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் மற்றும் பிரதேச சபை தலைவர் ஆகியோரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்