Fri. May 3rd, 2024

வடமராட்சியில் மேலதிக வகுப்பெடுத்த ஆசிரியைக்கு நேர்ந்தகதி – அதிபரின் அசமந்த போக்கு

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்தில் மேலதிக வகுப்பெடுத்த பெண் ஆசிரியை ஒருவரை சிலர் கத்தி கொண்டு மிரட்டிய போதும், குறித்த அதிபர் மேலதிக வகுப்பை எடுக்குமாறு பணித்து விட்டு தான் வீடு சென்றுள்ள விடயம் பலரையும் விசனமடைய வைத்துள்ளது.

குறித்த சம்பவம் வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
நேற்று புதன்கிழமை ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு பிற்பகல் 3 மணி தொடக்கம் 5 மணிவரை மேலதிக வகுப்பு நடைபெற்றது. சுமார் 4 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த 16,17 வயதுடைய சிலரால் வகுப்பை நிறுத்துமாறும் பாடசாலையின் முன் கதவை  திறக்குமாறும் இல்லையேல் ஆசிரியையும், மாணவர்களையும் குத்தவுள்ளதாகவும் கூறி ஒருவர் கத்தியை காட்ட மற்றவர் உடைந்த கண்ணாடி போத்தலையும் காட்டி, வகுப்பை நிறுத்தாவிட்டால் வெளியில் வரும் குழந்தைகளை குத்தவுள்ளதாகவும் கூறி பயமுறுத்தியுள்ளனர்.
இதனால் அச்சம் கொண்ட ஆசிரியை
 பாடசாலை அதிபருக்கு அறிவித்துள்ளார். குறித்த பாடசாலைக்கு வருவதை கண்ட அவர்கள் தப்பியோடியுள்ளனர். குறித்த ஆசிரியையிடம் 
தற்போதுதான் கூட்டம் முடிந்து சாப்பிட முற்பட்ட போது ஆசிரியை தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாகவும் கடுமையான தொனியில் குறிப்பிட்டு, இனி ஒன்றும் நடக்காது மேலதிக வகுப்பை தொடருமாறும் கூறிவிட்டு பாடசாலையை விட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அச்சத்துடன் குறித்த நேரம் வரை வகுப்பை நிறைவு செய்துவிட்டு மாணவர்களையும் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு வீடு திரும்பும் வழியில் இருவர் குறித்த ஆசிரியை மீது கல் வீசிவிட்டு தப்பியோடினர். குறித்த கல் அவர் பயணித்த மோட்டார் சையிக்கிளை சேதப்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக அதிபருக்கும்,  வலயக் கல்வி பணிப்பாளருக்கும் தெரியப்படுத்தியதாகவும்,  வலயக் கல்வி பணிப்பாளரினால் ஆசிரியை பாதுகாப்பாக வீடு செல்லுமாறும், அதிபருடன் தாம் கதைப்பதாகவும் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவத்தை அடுத்து அதிபர் மாணவர்களையும் ஆசிரியையும் பாதுகாப்பாக அனுப்பாது தான் வீடு சென்றது பலரதும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்