Sat. Apr 27th, 2024

லீக் சுற்றின் முதலாவது வெற்றியை பதிவு செய்தது கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி. 

லீக் சுற்றின் முதலாவது வெற்றியை பதிவு செய்தது கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு சென்யூட் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியில் நடாத்தும் அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான  உதைபந்தாட்ட போட்டிகள் குறித்த கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சூப்பர் 8 அணிக்கான போட்டியில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து  விடத்தல்தீவு புதிய ஐக்கியம் அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில்  இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய போதிலும் 16வது நிமிடத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் மாதுஜன் ஒரு கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் றேஞ்சஸ் அணி 1:0 என்ற கோல் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக போராடினர். இதில் றேஞ்சஸ் அணி வீரர் சுஜாஸ்கான் 36வது நிமிடத்தில் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்டநேர முடிவில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சூப்பர் 8 அணிக்குத் தெரிவு செய்யப்பட்டனர். போட்டியின் ஆட்டநாயகனாக கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் மாதுஜன் தெரிவு செய்யப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்