Tue. Apr 30th, 2024

றொசானின் அதிரடி ஆட்டம் மகாஜனாக் கல்லூரி இனிங்ஸில் முன்னிலை

இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடாத்தும் முதலாம் சுற்று ஆட்டத்தில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி முன்னிலையில் உள்ளது.
இலங்கை பாடசாலைகள் சங்கம் நடாத்தும் 13 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான கிரிக்கெட் தொடரில் இன்று தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணியை எதிர்த்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி 38.1 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.
அவ்வணி சார்பில் சாருஜேஸ் 17, சிவதன் 14 ஓட்டங்களை பெற்றனர். பந்து வீச்சில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணி சார்பில் யோவெல் றொசான் 3, வொசிந்தன் 3, துளசிகன் 2, ரகசிஜன் 2 இலக்குகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து தனது முதலாவது இனிஸில் துடுப்பெடுத்தாடிய தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணி 42.1 பந்துப் பரிமாற்றத்தின் போது 4 இலக்குகளை இழந்து 102 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. யோவெல் றொசான் 52, ரகசிஜன் 16 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி சார்பில் மதுசன் 3 இலக்குகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து தனது இரண
இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி
21 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 3 இலக்குகளை இழந்து 61 ஓட்டங்களை பெற்ற போது ஆட்ட நேரம் நிறைவடைந்தது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்