Tue. May 7th, 2024

யுத்த குற்றம்  சர்வதேச நீதிமன்றத்தில்!! -பேச்சு நடப்பதாக சுமந்திரன் தகவல்-

யுத்த குற்றம் தொடர்பில் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுடன் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றுள்ள போது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது.

இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்கும் சுமந்திரன்:- யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளன.

றோம் சட்டத்திற்கு குறித்த நாடு இணங்கி இருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் பாதுகாப்பு சபையில் அது தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இவை இரண்டுக்கும் மாறான வேறு வழிகள் இப்போது இல்லை. இலங்கை அரசாங்கம் றோம் சட்டத்திற்கு கைச்சாத்திடவில்லை. இதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது என்றார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்கள் இருப்பினும் மியன்மர் நாட்டின் விவகாரத்தில் மாற்று பொறிமுறை ஒன்று அனுகப்பட்டு, அதன் ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அந்த விடயம் கொண்டு செலலப்பட்டது. அவ்வாறான ஒரு பொறிமுறை இலங்கை விவகாரத்திலும் கையாள முடியாதா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சுமந்திரன், மியன்மார் நாட்டின் விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டமையை எடுத்துக் காட்டாக காட்சி ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அது தொடர்பான விபாரங்களை இப்போது சொல்ல முடியாது என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்