Mon. Apr 29th, 2024

யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட தொடரில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி அரையிறுதியாட்டத்திற்கு தகுதி

யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தில் அங்கம் வகிக்கும்  பாடசாலைகளுக்கிடையிலான இளையோருக்கான  கூடைப்பந்தாட்ட தொடரில் 15 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தில் அங்கம் வகிக்கும் பாடசாலைகளுக்கிடையிலான இளையோருக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் யாழ்ப்பாணம் பழைய பூங்கா கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று நடைபெற்ற 15 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் முதலில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதியது. இதில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி 26:10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அடுத்து நடைபெற்ற ஆட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து வேலணை மத்திய கல்லூரி அணி மோதியது. இதில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி 15:06 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்