Fri. Apr 26th, 2024

யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி ஹொக்கியில் வெள்ளிக்கிண்ணம்

இலங்கை பல்கலைக் கழகங்களுகிடையிலான ஹொக்கித் தொடரில் யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.
இலங்கைப் பல்கலைக் கழகங்களுகிடையிலான ஹொக்கித் தொடரின் இறுதியாட்டம் நேற்று திங்கட்கிழமை பம்பலப்பிட்டி பொலீஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழக அணியை எதிர்த்து கொழும்பு பல்கலைக் கழக அணி மோதியது. இதில் இரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நேரத்தில் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தனர்.  இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி 4:1 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்