Mon. May 6th, 2024

மன்னாரில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல் 

மன்னாரில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படுகின்ற காலப்பகுதிகளிலும், ஏனைய நாட்களிலும் மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் சுத்திகரிப்பு பணி மற்றும் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு   அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் இன்று சனழக்கிழமை (18)வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட சுமார் 60   பணியாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் தேவையான உலர் உணவுப் பொருட்கள் இன்றைய தினம் சனிக்கிழமை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஏற்பாட்டில் அதன் குழுத் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் காலை 11 மணியளவில் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,நகர சபையின் செயலாளர்,உப தலைவர்,நகர சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு துப்பரவு பணியாளருக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்தனர்.
 இதன் போது அரிசி, சீனி , பருப்பு , உற்பட சுமார் 2500 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் 60   பணியாளர்களுக்கு  வழங்கிவைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்