Thu. May 2nd, 2024

மகுடம் சூடியது றேஞ்சஸ் அணி 

 கரவெட்டி நவசக்தி விளையாட்டுக் கழகம்  தமது 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமராட்சி லீக் மற்றும் பருத்தித்துறை லீக் அணிகள் பங்குபற்றிய 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி சம்பியனாகியது.
இதன் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கரவெட்டி நவசக்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து கரணவாய் கொலின்ஸ் அணி மோதியது .  இரண்டு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் ஆட்டம் ஆரம்பத்தில் இருந்தே மிக விறுவிறுப்பாக நடைபெற்றது . ஆட்டத்தின் 12 வது நிமிடத்தில் வினோதனின் சிறப்பான பந்துபறிமாற்றத்தை கைலாஸ் அவர்கள் நேர்த்தியான கோலினை போட்டு 1வது கோலினை பதிவு செய்தார். முதல் பாதியாட்டம் 1:0 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது. இரண்டாம் பாதியாட்ட ஆரம்பத்தில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது . கொலின்ஸ் அணி  கோல் போடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும் றேஞ்சஸ் கோல்காப்பாளரினால் சிறந்த முறையில் தடுக்கப்பட்டு கொண்டிருந்தது . இரண்டாம் பாதியாட்டத்தின் 34 வது நிமிடத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் கைலாஸின் சிறப்பான பந்துபரிமாற்றத்தை சரியாக கணித்த பிரசாந்தன் தனது அணிக்கான 2 வது கோலினை பெற்றுக் கொடுத்தார்.  மேலதிக கோல்களின்றி ஆட்டம் முடிவடைய 2:0 என்ற கோல் கணக்கில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி  வெற்றி பெற்று சம்பியனாகியது. சிறந்த ஆட்ட நாயகனாக கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் பாக்கியராஜ்,  சிறந்த கோல் காப்பாளராக கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர்  முகுந்தன்,  தொடர் ஆட்ட நாயகனாக கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் கைலாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்