Fri. May 3rd, 2024

பொலிஸாருக்கு எதிராக யாழ் மனித உரிமை காரியாலயத்தில் முறைப்பாடு

யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார் உடுப்பிட்டியை சேர்ந்தவர்

தமது கட்டளையை மீறி சென்றார் என பொதுமகன் ஒருவரை மோட்டார்சைக்கிளில் துரத்தி வந்து மறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியை காட்டி சுட்டு கொலை செய்வேன் என மிரட்டியதாக மனித உரிமை ஆணைக்குழுவின்  யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வடமராட்சி உடுப்பிட்டி சந்திக்கு அருகில் நேற்று  10 வியாழக்கிழமை இரவு உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாண் வாங்குவதற்கு கடைக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த வேளை அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், நான் மோட்டார் சைக்கிளை மறித்தபோது நிப்பாட்டாமல் ஓடினாய்  என தகாத வார்த்தைகளால் பேசி அவரது மோட்டார் சைக்கிளை காலால் உதைந்து உள்ளார்.  தான் சந்திக்கு வரவில்லை என்றும் பக்கத்து கடையில் பாண் வாங்கி கொண்டு சென்றுள்ளதாக அந்த நபர் கூறினார். அந்தப் பொலிஸ் தகாத வார்த்தைகளால் பேசி சுட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். மீண்டும் சந்திக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் சந்தியில் நின்ற மற்ற பொலிஸ் உத்தியோகத்தர் இவர் இல்லை என கூறியுள்ளநிலையில்,  என்னை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி ஓடு என துரத்தினார்.  இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் எனக் கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்