Mon. Apr 29th, 2024

பொங்கலுக்கு தனுஷின் பட்டாசு

எதிர்வரும் பொங்கலுக்கு தனுஷ் நடிக்கும் பட்டாசு திரைப்படம் திரைக்கு வருகிறது.

அதிரடி மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது. தனுஷ் இத்திரைப்படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் களம் இறங்கியுள்ளார்.
தனுஷ் ஏற்கனவே கொடி எனும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடியது. இதனால் இத்திரைப்படமும் வெற்றியளிக்கும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இத் திரைப்படத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.துரை செந்தில்குமார் தனுஷை வைத்து கொடி திரைப்படத்தை இயக்கியவர். சிவகார்த்திகேயன் நடித்த  எதிர் நீச்சல் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிய இவர் சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச்சட்டை திரைப்படத்தின் பின்னர் பலரது பாராட்டையும் பெற்றார்.
இதனால் தனுஷின் பட்டாசு திரையரங்குகளில் பொங்கலுக்கு வெடிக்கவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்