Thu. May 2nd, 2024

பெற்றோர்கள் பிள்ளைகளை விளையாட்டு மைதானத்திற்க்கு அனுப்பி வைத்தால் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிவராது என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்

பெற்றோர்கள் பிள்ளைகளை விளையாட்டு மைதானத்திற்க்கு அனுப்பி வைத்தால் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிவராது என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். மேலும் அவர் கருத்துரைக்கையில் இன்று முதியவர்கள் மட்டுமல்லாது பாலகர் தொட்டு விருத்தகர் வரை வைத்தியசாலையை நாடவேண்டிய தேவை அதிகரித்து வருகின்றது இதற்கான காரணம் பிள்ளைகள் உடல் உளரீதியாக ஆரோக்கியம் அற்று இருப்பதேயாகும். இதனை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். குறிப்பிட்ட நேரமாவது பிள்ளைகள் மைதானத்தில் வியர்வை வெளியேறும் வரை விளையாட அனுமதிக்க வேண்டும். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போல விளையாட்டு மைதானம் இல்லாத ஊர் வினைதிறன் அற்றவர்களையே உருவாக்கும். சிறந்த முறையில் கல்வியை பெற்றுக் கொண்டாலும் சமூகத்தில் சவால்களுக்கு முகம் கொடுத்து வாழ்வதற்கு விளையாட்டு மைதானமே அனுபவத்தை கற்றுக் கொடுக்கின்றன. அத்துடன் பிள்ளைப்பருவத்திலேயே தொற்றா நோய்க்கு ஆளாகின்றனர் இதனால் கல்வி பாதிப்பதுடன் குடும்பமே மகிழ்ச்சியற்தாக மாறுகின்றது வைத்திய செலவு அதிகரிப்பதனால் பொருளாதார சுமை ஏற்படுகின்றது. கல்வியின் மூலம் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வைத்தியசாலைகள் அதிகரிக்கின்றது. அதைவிட நோயாளிகளின் எண்ணிக்கை பல்கிப்பெருகுகின்றது. இதற்கு மூலகாரணம் பிள்ளைகளை விளையாட்டு மைதானத்திற்கு பெற்றோர்கள் அனுமதிக்காமை. அது மட்டுமல்லாது பிள்ளைகள் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்டு தம்மை தாமே மாய்க்கும் செயலில் ஈடுபடுகின்றனர். வலுவிழந்தவர்களாக, வாழத்தெரியாதவர்காளாக, வீட்டுக்குள் முடங்கி கைத்தொலைபேசி தொலைக்காட்சி போன்றவற்றை பார்த்து கண்பார்வையை இழக்கின்றனர். நரம்பியல் பலவீனம் ஏற்பட்டு சிந்தனை சிதைக்கப்படுகின்றது. உடல்நலம் கெட்டுப் போகின்றது. சுறுசுறுப்பு அற்றவர்களாக பாதிக்கப் பட்டவர்களாக நடமாடுகின்றார்கள். இதனை தவிர்க்க குறிப்பிட்ட நாளாவது பெற்றோர்கள் விளையாட்டு மைதானத்திற்கு அனுப்புங்கள். எங்கள் எதிர்கால சிற்பிகளை பிரகாசமாக்க வேண்டும். ஆளுமைமிக்கவர்களாக உருவாக்க வேண்டும். தமிழர் தேசம் அறிவுமிக்கதாக  உருவாக வேண்டும் அதனை உருவாக்க ஆற்றல் மிக்கவர்கள் தேவை என சங்கத்தின் தலைவர். ப.தர்மகுமாரன்  தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்