Tue. Apr 30th, 2024

பிளாஸ்டிக் பைகளுக்கு (Shopping bags) பின்னால் உள்ள உண்மை.

காகிதப் பைகள், துணி பைகள் ஏன் பிளாஸ்டிக்கை விட சுற்று சூழலுக்கு ஆபத்தானவை.

பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அடையாளமாக மாறிவிட்டது. ஆனால் அதை உருவாக்கியவரின் (Sten Gustaf Thulin) குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கையில் “சுற்று சூழலுக்கு நன்மையாக இருக்க வேண்டும் என்கின்ற நோக்கத்திலேயே பிளாஸ்டிக் பைகள் வடிவமைக்கப்பட்டது. இன்றைய காலத்தில் அது எவ்வளவு பிரச்சனையானதாகவும், உலகிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது கண்டு அவர்கள் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாகவும், பைகள் விற்பனையிலிருந்து எங்கள் குடும்பத்தினர் எந்த பணமும்” சம்பாதிக்கவில்லை என்று குறிப்பிட்டனர்.

பிளாஸ்டிக் கழிவுகள் உலகிற்கு ஒரு பெரிய அச்சுத்தலாக மாறியுள்ளது. பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு வெவ்வேறு நாட்டு அரசாங்கத்தினாலும், சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்புகளாலும் துணி பைகளையும், காகித பைகளையும் பயன்படுத்துமாறு மக்களை வலியுத்துகின்றனர். ஆனால் துணி பைகளும் காகித பைகளும், பிளாஸ்டிக் பைகளை விட காலநிலை மாற்றத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திக்கின்றன.

பிளாஸ்டிக் பைகள் சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திலையே கண்டுபிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகள் ஸ்வீடனில் (Seweden) Sten Gustaf Thulin என்பவரால் 1950 ல் உருவாக்கப்பட்டது. அன்றைய காலத்தில் மக்கள் காகித பைகளையே பெருமளவில் பாவித்தார்கள். காகித பைகளை தயாரிப்பதற்காக மரங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டது. மரங்கள் அழிக்கப்படுவது காலநிலை மாற்றங்களை உருவாக்கும் என்பதனால் Sten காகித பைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் பைகளை உருவாக்கினர். பிளாஸ்டி பைகள் வலிமையானவையாவும், குறைந்த நிறையை கொண்டவையாகவும், நீண்டகாலத்திற்கு மக்களால் மீண்டும் மீண்டும் பாவிக்க கூடியதாகவும் இருக்கும் என்ற நோக்கத்திலையே உருவாக்கினார். இதனால் குறைந்தளவில் மரங்கள் வெட்டப்படும் இதனால் உலகம் பாதுகாக்கப்படும் என்றும் நம்பினர். ஆனால் மக்கள் இதனை ஒரு முறை மாத்திரமே உபயோகித்து விட்டு தூக்கி வீசுகிறார்கள். பிளாஸ்டிக் பைகள் நீண்ட காலத்திற்கு அழியாமல் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதனால் பல நாடுகள் பிளாஸ்டிக் பாவனையை முற்றாக தடுத்துவிட்டன. இதற்கு பதிலாக காகித மற்றும் துணி பைகளை பாவிக்க மக்களை ஊக்குவிக்கின்றன.

ஆனால் இவ்வாறான பைகளை தயாரிப்பதற்கு பெருமளவு சக்தியும், தண்ணீரும் செலவிட படுகின்றது. பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பதற்கு சிறிதளவு எண்ணெய்யும், குறைந்தளவான சக்தியுமே பயன்படுத்தபடுகின்றது. ஒரு மீள் சுழற்சி செய்யகூடிய பிளாஸ்டிக் பையை ஒரு தடவை பாவித்து விட்டு எரிவதால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்ய காகித பையை மூன்று தடவைகள் பாவிக்க வேண்டும். துணி பையை 131 தடவைகள் பாவிக்க வேண்டும்.

சுற்று சூழலை பாதுகாப்பது மக்களில் தான் தங்கி உள்ளது. உங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பைகளை மீண்டும் மீண்டும் பாவியுங்கள். கடைகளுக்கோ, சந்தைக்கு செல்லும் பொது உங்களிடம் இருக்கும் பைகளை எடுத்து செல்லுங்கள். அனாவசியமாக பிளாஸ்டிக் பைகளை வாங்குவதை தவிருங்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்