Mon. Apr 29th, 2024

பின்னகர்த்தப்பட்ட நந்திக்கடல் பாதுகாப்பு வேலி!! -மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கையால் மகிழ்ச்சியில் மீனவர்கள்-

முல்லைத்தீவு நந்திக் கடலில் மீன்பிடிப்பவர்களுக்கு தடையாக படைத்தரப்பால் போடப்பட்ட பாதுகாப்பு வேலிகள் பின்னகர்த்தப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாகவே படைத்தரப்பு குறித்த பாதுகாப்பு வேலிகளை அகற்றி, மீனவர்கள் மீன்படியில் ஈடுபட அனுமதித்துள்ளது.

நந்திக்கடலில் படைத்தரப்பால் போடப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளால் தாம் சுமந்திரமாக மீன்படியில் ஈடுபட முடியாமல் உள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களிடம் முறைபிட்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் நந்திக்கடல் சிற்றளவு மீனவர் சங்கத்தினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்ததை அடுத்து, படைத்தரப்பால் குறித்த பாதுகாப்பு வேலிகள் பின்னகர்த்தப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்