Fri. Apr 26th, 2024

பாடத் தெரிவில் மாணவர்கள் அக்கறை செலுத்த வேண்டும்- ப.தர்மகுமாரன்

உயர்தரத்திற்கான பாடத்தெரிவில் மாணவர்கள் அலட்சியம் காட்டக்கூடாது என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்  கேட்டுள்ளார்

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் தமது உயர்தர பாடத் தெரிவில் மிகவும் அவதானமாக செயல்பட வேண்டும் இல்லையேல் எதிர்காலம் சிக்கலாக அமைந்துவிடும். ஏனெனில் உயர்தரத்தில் கணித,விஞ்ஞான, வர்த்தக  பாடத் தெரிவை விட கலைத்துறையில் பாடத் தெரிவு பல்கலைக் கழகங்களில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கற்கை நெறிகளுக்கு ஏற்ப பாடங்களை தெரிவு செய்வதன் மூலம் பல்கலைகழகத்திற்க்கு இலகுவாக தெரிவாவதுடன் பட்டதாரியாகவும் வேலைவாய்ப்பையும் பெறமுடியும். இலங்கை பல்கலைகழகங்களில் புதிதாக பல பாடத்துறைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் தமிழ் மாணவர்கள் தமது மாவட்ட பல்கலைக் கழகங்களுக்கு ஏற்றவாறே பாடத்தெரிவை மேற்கொள்ளுகின்றனர்.
பாடசாலை நிர்வாகம் தங்களிடம் உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்ப பாடத்தெரிவை மேற்கொள்ளுமாறு மாணவர்களை வற்புறுத்துவதுடன் வேறுபாடங்களை தெரிவு செய்தால் தாம் பொறுப்பு அல்ல என தட்டிக்கழிகின்றனர். இதனால் பாதிக்கப்பவது மாணவர்கள் என்பதுடன் தமிழ் மாணவர்களுக்கு கிடைக்ககூடிய துறைசார்ந்த பட்டமும் கிடைக்காமல் போகிறது இதனைக்கருத்தில் கொண்டு கடந்தகாலத்தில் விடபட்டதவறுகளை தொடராது இலங்கை பல்கலைகழகங்களில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கற்கை நெறிகளுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தி பாடத்தெரிவை மேற்கொள்ள வேண்டுமென சங்கத்தின்  தலைவர் ப தர்மகுமாரன் கேட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்