Sat. Apr 27th, 2024

உசன் ம.வி. பழைய மாணவரின் முன்மாதிரியான செயல்

யா/உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் 2020 க.பொ.த . சாதாரண தர பரீட்சையில் அனைத்து பாடங்களிலும்  A  தர சித்தி பெற்ற இரு மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுள்ளது.

சிவபாதம் குடும்பத்தினர் சார்பாக அவுஸ்திரேலியாவில்  வசிக்கும் பழைய மாணவர்  சிவபாதம்  சுவேந்திரன் அவர்களின் நிதி அனுசரணையில் தலா 10000/= வீதம் ஊக்குவிப்பு அன்பளிப்பாக இன்று  பாடசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தென்மராட்சி சுகாதார  வைத்திய அதிகாரியும் பாடசாலையின் பழைய மாணவருமான வைத்தியர் சிவபாதம் சுதோகுமார்  அவர்களால்  வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலையில் அனைத்து பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்ற ஜெ.றொ.அன்சன் மற்றும்  சி.சானுஜா ஆகிய இருவருக்குமே ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுள்ளது.
அத்துடன் பாடசாலையில் வெளியான க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 78 வீதமானவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
உசன் இராமநாதன் மகா வித்தியாலய கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை – 2020 சிறந்த பெறுபேறுகள்
01) ஜெ.றொ.அன்சன் :- 9A
02) சி.சானுஜா :- 8A*(சங்கீத பாடம் இறுதி செய்ய வில்லை)
03) ஜெ.கோபிகா :- 7A,2B
04) சு.டினுசன் :- 6A,B,C
05) ம.நர்த்தனன் :- 5A,2B,C
06) தி.ஆர்த்திகா :- 4A,2B,2C
07) மு.யதுர்சன் :- 4A,2B,C,S
08) யோ.தனுஜன் :- 4A,1B,C,2S
09) யோ.கஸ்தூரிகா :- 3A,3B,C,2S
10) லோ.லோகினி :- 3A,2B,C,2S
11) வி.குபனி :- 2A,3B,2C,S
12) சி.லதுர்ஷன் :- 2A,4C,2S
13) வ.பிரசன்னா :- A,B,6C
14) அ.வனோஜிதா :- A,3B,3C,S,W
தோற்றியோர் :- 27பேர்
க.பொ.த.உயர்தரத்துக்கு சித்தியடைந்தோர் :- 21பேர்
சித்தியடைந்த வீதம் :- 77.78%
அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்