Thu. May 9th, 2024

பாடசாலைகள்/பிரதேச செயலகங்களை குறிப்பிட்டு நிதி மோசடி

வடமராட்சி பகுதியில் பாடசாலை, பிரதேச செயலகம் மற்றும் விளையாட்டு கழகங்களை  குறிப்பிட்டு சிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. நெல்லியடி மத்திய கல்லூரியின்  அபிவிருத்திக்கு நிதி சேகரிப்பதாதவும், கரவெட்டி பிரதேச செயலக நிவாரணப் பணிக்கு நிதி சேகரிப்பதாகவும், நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு கழக அபிவிருத்திக்கு நிதி சேகரிப்பதாக கூறி பல தொகைப் பணங்களை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக இனந்தெரியாத இரண்டு நபர்கள் கறுப்பு கலர் ஜக்கற் போட்டு பல்ஸர் மோட்டார் சைக்கிளில் இவ் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. வடமராட்சி பகுதியில் அரச உயர் பதவிகளில் இருப்போரிடத்திலும் இந்த பண மோசடி இடம் பெற்றமை தெரியவந்துள்ளது.  உயர் பதவியில் இருக்கும் ஒருவர் நெல்லியடி மத்திய கல்லூரி பெயர் குறிப்பிடப்படும் போது இது தொடர்பாக அறிவித்தல் எதுவும் கிடைக்கவில்லை என கேட்ட போது ஒலிபெருக்கியில் அறிவித்ததாகவும் குறித்த நபர்கள் கூறியுள்ளதாகவும், அவர்கள் வைத்திருந்த CR கொப்பியில் சிலரது பெயர் மற்றும் பணம் என்பன பதியப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் கிருஷ்ணகுமார் தெரிவிக்கையில்,  தாம் எந்த நிதி சேரிப்பிலும் ஈடுபடவில்லை. இவர்கள் தொடர்பான செய்தி தெரிந்தால் உடனடியாக பொலீஸாருக்கு தெரியப்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் தெரிவிக்கையில் இது ஒரு பண மோசடி ஆகும். இது தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து தமது பகுதிக்குட்பட்ட கிராம அலுவலகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் தொடர்பான மோட்டார் சைக்கிள் இலக்கம்,  ஆள் ஆடையாளங்கள் CCTகமராக்களில் தெரிந்தால் உடன் தெரியப்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்