Mon. May 20th, 2024

வடமாகாணத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பருத்தித்துறை புலோலி பகுதியைச் சேர்ந்த ஒருவர் உட்பட நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
இன்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்தியசாலை  மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில்  641  பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 7 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா பொது வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கும், அளவெட்டி  பகுதியில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கும்,  மானிப்பாய் பகுதிகளைச் சேர்ந்த ஒருவருக்கும்,  பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சமூகத் தொற்று ஏற்பட்கூடிய வாய்ப்பு உள்ளது. குறித்த நபர் மருதனார்மடம் மோட்டார் திருத்தும் கடையில் சேவிஸ் செய்த பின்னர்  கடையில் தண்ணீர் வாங்கிக் குடித்ததாகவும், அதன் பின்னர் 3 நாட்களாக வீட்டில் நடமாடியுள்ளார். இந்நிலையில் சளி மற்றும் தொடர்ச்சியான காச்சல், தொண்டை நோ எனக் குறிப்பிட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாதிரி அனுப்பப்பட்டது. முதலில் தீர்மானிக்க முடியவில்லை என முடிவு கிடைத்ததன் பேரின் நேற்று இவருக்கான இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  இவர் நேற்று வயிற்றுக் குத்து காரணமா பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று  கொரோனா தொற்று உறுதி என முடிவு கிடைத்ததையடுத்து 7ம் விடுதி சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்